Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லோரும் எதிர்பார்த்த விஜய்யின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட் இதோ! பெரும் கூட்டணியில்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படம் இந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக வெளிவரவுள்ளது. இதனால் பெரும் வசூல் செய்யும் என எதிர்பார்கப்படுகிறது.

இப்படத்தின் பாடல் காட்சிகளில் இன்னும் சில படமாக்கப்படவேண்டியது பாக்கி உள்ளது. மறுபக்கம் இசை வெளியீட்டு விழா எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே வேளையில் அவரின் அடுத்த படம் ( விஜய் 64) மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தான் என அறிவிப்பு வந்தது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்திலிருந்து முக்கிய அப்டேட் வருவதாக கூறப்பட்டது. தற்போது அந்த அப்டேட் இதோ.. இதில் இசையமைப்பாளர் அனிருத், ஸ்டண்ட் சில்வா, DOP சத்யா, எடிட்டிங் பிலோமின் ராஜ் என உறுதியாகியுள்ளது.