Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் நடிகையுடன் எங்கேயும் எப்போதும் பட புகழ் நடிகர்! தமிழில் அடுத்த படம் படபூஜையுடன் ஆரம்பம் - புகைப்படங்கள் இதோ

கடந்த 2011 ல் வந்த எங்கேயும் எப்போதும் படத்தில் நடிகை அனன்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் சர்வானந்த். தமிழில் அவர் காதல்னா சும்மா இல்ல, நாளை நமதே, JK என்னும் நண்பனின் வாழ்க்கை ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தற்போது அவர் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் பல வருடங்களுக்கு பின் சர்வானந்த் தமிழில் நடிக்கிறார். ரிது வர்மா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

தருண் பாஸ்கர் இப்படத்தை இயக்க எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார். இதன் படபூஜை இன்று நடைபெற்றது. 2020 கோடை விடுமுறை ஸ்பெஷலாக இப்படத்தை வெளியிட திட்டமாம்.

ரிது வர்மா வேலையில்லா பட்டதாரி 2, துருவ நட்சத்திரம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.