Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் நடிப்பை இழிவுபடுத்திவிட்டனர்.. நடிகர் கவுண்டமணி புகார்

தமிழ் சினிமா தற்போதும் கொண்டாடும் காமெடி ஜாம்பவான்களில் ஒருவர் கவுண்டமணி. சின்னத்தம்பி படத்தில் அவர் மாலையில் கண்தெரியாதவராக நடித்திருப்பார். அது ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு பிரபலம் என்பது அனைவருக்கும் தெரியும்.

அவரது அந்த ரோலை அப்படியே காபி அடித்து தற்போது வைபவ் நடிப்பில் சிக்ஸர் என்ற பெயரில் படமாக்கியுள்ளனர். ஒரு கோடி கொடுத்தாலும் மாலை ஆறு மணிக்கு மேல் வேலை செய்யமாட்டேன் என வரும் வசனமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அது பற்றி தற்போது கவுண்டமணி புகார் அளித்துள்ளார். தன்னுடைய அனுமதி இல்லாமல் இப்படி செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுண்டமணியின் வக்கீல் சிக்ஸர் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

"அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தியிருக்கும் விதத்தையும், இழிவான வசனங்களையும் பார்த்து அதிர்ச்சியுற்றார். அந்த வசனம் மிகவும் அவதூறானது. எனது கட்சிக்காரரின் நற்பெயருக்கு, நன்னடத்தைக்கு களங்கம் விளைவிப்பதாய் உள்ளது," என அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.