Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாஹோ பாக்ஸ் ஆபிசில் முதலிடம் - மூன்று நாள் வசூல் விவரம்

பிரபாஸ் நடித்த சாஹோ படம் மோசமான விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை செய்துள்ளது இந்த படம்.

இந்நிலையில் தற்போது ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து மூன்று நாள் சென்னை வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் மட்டும் இந்த படம் 1.81 கோடி ரூபாய் வசூலித்து சென்ற வார பாக்ஸ் ஆபிசில் முதலிடம் பிடித்துள்ளது.

அதில் தமிழில் 86 லட்சம், தெலுங்கில் 81 லட்சம் ருபாய் மற்றும் ஹிந்தியில் 14 லட்சம் ருபாய் வசூல் வந்துள்ளது என கூறப்படுகிறது.