சந்தானத்திற்கு அண்மையில் வந்த A1 படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் அள்ளியது. அதே வேளையில் படம் சில சர்ச்சைகளில் சிக்கியது. தற்போது சந்தானம் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறாராம்.
இப்படத்தின் பூஜைகள் இன்று சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் நடைபெற்றுள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
எம்.கே.ராம் பிரசாத் படத்தை தயாரிக்க இதில் ஸ்டண்ட் சில்வா, ஆர்.கே.செல்வா, சண்முக சுந்தரம், ராஜ்குமார், ஜான்சன் ஆகியோரும் இணைந்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர் இதோ...