Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ் லுக்கில் அஜித்தின் மைத்துனர், ஷாலினிதம்பியின் மிரட்டலான போஸ்டர் இதோ

தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடிகளில் ஒன்று அஜித், ஷாலினி. அமர்க்களம் படம் மூலமாக இருவரின் மனமும் காதலில் கலந்தது. அஜித்தின் சோதனையாக கால கட்டத்தில் பக்க பலமாக இருந்து அவரை வெற்றியடைய பெருமையில் ஷாலினிக்கும் பங்கு இருக்கின்றது.

ஷாலினியும் சிறுவயது முதலே சினிமா நடித்து புகழ்பெற்றவர். அதே போல அவரின் தங்கையும். தற்போது ஷாலினியின் தம்பி ரிச்சர்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வந்துள்ளார்.

பழைய வண்ணார பேட்டை படத்தை இயக்கிய மோகன் இயக்கும் திரௌபதி படத்தில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். படப்படிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. கிரவுட் ஃபண்ட் என பலரின் முதலீட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.