Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாஹோ கதை இங்கிருந்து தான் திருடப்பட்டதா.. வெளிநாட்டு இயக்குனர் தெலுங்கு சினிமா மீது கடும் கிண்டல்

பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படம் என்னதான் வசூலை வாரிக்குவித்துவந்தாலும், அது பற்றி நெகட்டிவ்வான விமர்சனங்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன.

இந்த படம் Largo Winch என்ற பிரெஞ்சு படத்தின் காபி என்றொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது . இதற்கு முன்பே தெலுங்கில் வந்த அங்னியாதவாசி என்ற படமும் லார்கோ வின்ச் படத்தின் காபி என்று தான் கூறப்பட்டது.

இது பற்றி பிரெஞ்சு இயக்குனர் Jérôme Salle ட்விட்டரில் காட்டமாக பேசியுள்ளார். 'இந்த முறையும் மோசமாக தான் எடுத்திருக்கிறார்கள். கதையை திருடினாலும் ஒழுங்காக எடுங்கள்' என தெலுங்கு இயக்குனர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் அவர்.