Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் மீது எழுந்த மோசமான புகார்! விழா மேடையில் பகிரங்கமாக கூறிய தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். செல்லம் என அவர் கூறிய அந்த ஒரு டையலாக் அவருக்கு ஒரு தனி அடையாளமாக பதிந்துவிட்டது.

அண்மைகாலமாக தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். தனி கட்சி மூலம் நடந்து முடிந்த தேர்தலில் போட்டி போட்டு தோல்வியைடந்தார்.

இந்நிலையில் அவர் மீது பிரபல தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஜாக்குவார் தங்கம் அண்மையில் சென்னையில், புளுவேல் என்ற படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பிரகாஷ் ராஜ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நடிக்க நேரமில்லை என்று கூறிவிட்டார். ரூ.15 லட்சம் முன்பணத்தில் ரூ.5 லட்சம் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தைத் திருப்பிதர மறுக்கிறார். அவர் எந்த படப்பிடிப்பில் இருந்தாலும் மறியல் நடத்துவோம் என பகிரங்கமாக பேசியது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.