Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷ்ணு விஷாலுடன் இணைந்த பிக்பாஸ் புகழ் ரொமாண்டிக் நடிகை! மேலும் இரண்டு நடிகைகள்

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு அண்மையில் ராட்சஸன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. பல படங்களில் நடித்தவரின் முதல் படம் வெண்ணிலா கபடி குழு. இப்படமும் அவருக்கு ஹிட் தான்.

தற்போது முற்றிலும் மாறான கதை கொண்ட எஃப்.ஐ.ஆர் படத்தில் நடிக்கிறாராம். அதிலும் இதுவரை இல்லாத கேரக்டராம். மஞ்சிமா மோகன், பிக்பாஸ் ரைஸா, ரெபா மோனிகா ஜான் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

படத்தை கௌதம் மேனனின் உதவியாளராக பணியாற்றிய மனு ஆனந்த் இப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகிறார். திகில் பட கதையாம்.

கடந்த செப்டம்பர் 2 ல் படபூஜை போடப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு இன்று செப்டம்பர் 11 ல் நடைபெறுகிறது.