Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வரலாற்றில் முதன் முறையாக விஜய் படத்திற்கு கிடைத்த ஸ்பெஷல்! கொண்டாட்டத்தின் உச்சம்

விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நட்சத்திர நடிகர். அவரின் படங்கள் உலகளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. பாக்ஸ் ஆஃபிஸிலும் அவரின் படங்கள் பெரும் வசூல் சாதனை செய்கிறது.

அடுத்ததாக வரப்போகும் தீபாவளிக்கு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் வெளியாகவுள்ளது. அப்பா, மகன் என இரண்டு கெட்டப்பில் விஜய் நடித்திருக்கும் இப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது இலங்கையில் வரலாற்றில் முதன் முறையாக விஜய்யின் படத்திற்கு (பிகில்) மகளிருக்கென சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

திரிகோணமலை பகுதியில் உள்ள நெல்சன் திரையரங்கில் இப்படம் வெளியாகவுள்ளதாம்.