Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் படத்திற்கு இப்படி ஒரு மாஸான டைட்டில்! கடும் எதிர்ப்பு தெரிவித்த தயாரிப்பாளர்

தனுஷ் வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் அண்மையில் தான் நடித்து முடித்தார். அடுத்ததாக அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்ய லெட்சுமி நடிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் ஹாலிவுட் சினிமா நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக வருகிறார். இப்படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என டைட்டில் தேர்வு செய்யப்பட்டது.

இது எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் டைட்டில். 1973 ல் வெளியான இப்படத்தை தற்போது டிஜிட்டல் முறையில் மீண்டும் விரைவில் வெளியிட திட்டமிட்டுக்கிறார்கள்.

இப்படத்தை தயாரித்து வரும் சாய் நாகராஜன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் டிஜிட்டல் உரிமை என்னிடம் உள்ளது. இப்படத்தின் டைட்டிலை யாருக்கும் கொடுக்க மாட்டோம் என கூற தனுஷ் படத்திற்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது.