Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காப்பான் கதை திருட்டு வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள காப்பான் படத்தில் நடிகர் சூர்யா பல விதமான கெட்டப்களில் நடித்துள்ளார். படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது.

சமீபத்தில் ஜான் சார்லஸ் என்பவர் காப்பான் படத்தின் கதை தன்னுடைய 'சரவெடி' என்கிற பட கதையை கே.வி.ஆனந்த்திடம் கூறியதாகவும், அதை திருடித்தான் காப்பான் படம் எடுத்துள்ளார் என்று நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது இரண்டு பட கதைகளும் வேறு என லைகா நிறுவனம் வாதிட்டது. அந்த நபரை நான் பார்த்ததே இல்லை, அடையாளம் தெரியாத நபர்களிடம் நான் கதை கேட்பதில்லை என கே.வி.ஆனந்த் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஜான் சார்லஸ் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.