Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதல் விஷயத்தில் லாஸ்லியா எடுத்த முடிவு.. ஷாக் ஆன கவின் சொன்ன விஷயம்

பிக்பஸில் நீண்ட நாட்களாக மிக அழகான ரொமான்டிக் படம் போல ஓடிக்கொண்டிருந்த கவின்-லாஸ்லியா காதல் கதையில் பெரிய திருப்பமாக நேற்று லாஸ்லியாவின் பெற்றோர் வந்தது அமைந்துவிட்டது.

லாஸ்லியாவின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், 'உன்னை இப்படியா வளர்த்தோம். இங்கு கேம் விளையாட தானே வந்த.. அதை மட்டும் செய்' என அவர்கள் திட்டினர்.

இந்நிலையில் தற்போது லாஸ்லியா இது பற்றி அதிரடி முடிவை எடுத்துள்ளார். "இட்ஸ் ஓவர் (எல்லாம் முடிந்தது). இதற்கு இப்படியே முற்றுப்புள்ளி வைத்துவிட்டு கேம் மட்டும் பார்ப்போம்" என லாஸ்லியா கவினிடம் கூறிவிட்டார்.

அதை கேட்டு வாயடைத்து போன கவின், "இதுக்கு மேல அவங்க கஷ்டப்பட கூடாது. கஷ்டப்படுத்துற மாதிரி எதுவும் பண்ணிட கூடாது. பார்த்துக்கலாம்" என கூறிவிட்டார்.