Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அடுத்த ஸ்பெஷல்!

கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை சங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், நெடுமுடிவேண்டு, டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

அண்மையில் சென்னை தி நகரில் உள்ள ஹோட்டலுக்கு கமல்ஹாசன் வருவது போல படம் பிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரின் மாஸான காட்சிகள் சென்னை வளசரவாக்கத்தில் பீட்டர் ஹெய்ன் மேற்பார்வையில் படமாக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து ஆந்திராவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.