Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவின் அடுத்த படம்! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

தமிழ் சினிமா ரசிகர்கள் பலரின் மனதில் கனவுக்கன்னியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என பலரும் அவரை கொண்டாடி வருகிறார்கள்.

அவள் என்ற பேய் படத்தை இயக்கிய மிலிந்த் என்பவரின் இயக்கத்தில் அவர் அடுத்ததாக நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த தகவல் நேற்று வெளியானது. இப்படத்தின் நயன்தாரா தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்.

தற்போது இப்படத்திற்கு ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் என்ற படத்தின் பெயரை டைட்டிலாக வைத்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

இதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளின் டிடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.