அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ரஞ்சித். தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து அவர் குரல் எழுப்பி வருகிறார்.
அதே வேளையில் சில விசயங்களில் சர்ச்சையாக பேசி கடும் எதிர்ப்புக்கு ஆளானார். அவரின் தயாரிப்பில் வந்த பரியேறும் பெருமாள் படம் பாண்டிசேரி அரசு விருதை பெற்றுள்ளது.
அவர் அடுத்தாக இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு, உதவியாளர் சுரேஷ் மாரியின் புதிய படங்களையும் தயாரித்து வருகிறார்.
அடுத்ததாக அவர் ஆர்யா, கலையரசன், தினேஷ் ஆகியோர் நடிக்கும் படங்களை இயக்குகிறார். இப்படத்திற்கு சல்பேட்டா என பெயர் வைத்துள்ளதாக சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது இப்படத்தின் முழுமையான பெயர் சல்பேட்டா பரம்பரை என்பதாம்.