Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: பிக்பாஸ் புகழ் ஆரவ்வின் அடுத்தபடம்! தற்போதைய நிலவரம்

பிக்பாஸ் சீசன் 1 ல் போட்டியாளராக கலந்து கொண்டு 100 நாட்கள் கடந்து வெற்றியாளராக பிக்பாஸ் டைட்டிலையும் ட்ராஃபியையும் வென்றவர் ஆரவ். மாடலிங் ஹீரோவான இவர் சைத்தான் படத்தை தொடர்ந்து ராஜ பீமா, மார்க்கெட் ராஜா படங்களுக்காக காத்திருக்கிறார்.

இதில் மார்க்கெட் ராஜா படத்தின் பாடலும், டிரைலும் வரும் செப்டம்பர் 24 ல் வெளியாகவுள்ளது. இதனையடுத்து ஆரவ் ரகுராம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு சென்னை ராயபுரத்தில் இன்று தொடங்கியுள்ளது. நெடுநல்வாடை அஞ்சலி நாயர் ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தில் சக்தி வேல் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார். இவர் சண்டக்கோழி, ராங்கி படத்திலும் பணியாற்றியுள்ளார்.