Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மதுரையில் விஜய் ரசிகர்கள் கைது! போலீஸ் நடவடிக்கையால் அதிர்ச்சி

விஜய்யின் பிகில் பட இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. அதற்காகத்தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். சமீபத்தில் சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு பேனர் காரணமானதால், பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு யாரும் பேனர் வைக்கக்கூடாது என விஜய் உத்தரவு போட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது மதுரையில் விஜய் ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். மதுரை தத்தனேரி இஎஸ்ஐ மருத்துவமனை அருகில் உரிய அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியிருந்ததற்கு தான் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போக்குவரத்துப் பாதையில் மக்களின் கவனத்தை திசை திருப்பியதாக மதுரை விஜய் ரசிகர் மன்ற பொருளாளர் சதீஸ்குமார் மற்றும் ஜெயகார்த்திக் என்பவர் மீதும் வழக்கு பதிவு ஆகியுள்ளது. ஜெயகார்த்திக் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவரை தேடி வருகின்றனர்.