Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா-மோகன்லால் நடித்துள்ள காப்பான் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் சூர்யா மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் சூர்யா பேசும்போது காப்பான் படம் உண்மையில் 2012ல் ஒரு டாப் ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதை என்றும் அவர் நடிக்காமல் போனதால் இந்த வாய்ப்பு தற்போது தனக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

"அயன் தான் என் சிறந்த படம் என இப்போதும் சொல்கிறார்கள். மாற்றான் படமும் என் கேரியரில் முக்கியமான ஒன்று. கே.வி.ஆனந்த் எப்போதும் என்னை வேறு விதமாக பார்ப்பவர், என்னிடம் இருந்து பெஸ்ட்டாக வெளிக்கொண்டு வருபவர்" என இயக்குனர் கே.வி.ஆனந்த் பற்றி சூர்யா தெரிவித்துள்ளார்.