Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி.. தயாரிப்பு நிறுவனம் மீது கொந்தளிப்பில் ரசிகர்கள்

தளபதி விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் உள்ள ஒரு பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று நடக்கிறது.

இதில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் டிக்கெட்டுகளை விநியோகம் செய்திருந்தது. ஆனால் இருக்கும் இருக்கைகளை விட மிக அதிக அளவில் டிக்கெட்டுகளை விநியோகம் செய்துள்ளனர். அதனால் அரங்கம் நிறைந்தபிறகு மற்ற ரசிகர்கள் டிக்கெட் இருந்தும் உள்ளே செல்ல முடியாமல் இருந்துள்ளனர்.

கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இதனால் தயாரிப்பு நிறுவனம் மீது ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.