தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜய் உடன் மூன்று படங்களில் பணியாற்றியுள்ளார் அட்லீ. அடுத்து அட்லீ ஷாருக் கான் உடன் இணைகிறார் என சில மாதங்களுக்கு முன்பு செய்தி வந்தது.
ஆனால் அது பற்றி தற்போது வரை அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஒரு செய்தி பரவிவருகிறது.
டாப் ஹீரோவான ஜூனியர் என்டிஆர் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் என்பது தான் அது. அவர் ராஜமௌலியின் RRR படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் முடிந்தபிறகு அட்லீயுடன் படம் துவங்கும் என கூறப்படுகிறது.