இது மட்டும் நடைபெறவில்லை என்றால விஜய் படமே வந்திருக்காது! மறைமுகமாக எச்சரிக்கும் முக்கிய பிரமுகர்
இளைய தளபதி விஜய் வெளிநாடு கிளம்பிவிட்டார். அந்த புகைப்படங்களை காலை முதல் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் இங்கு அவர் குறித்த சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கிறது.
அவரின் நடிப்பில் பிகில் படம் தீபாவளிக்கு வெளியாக போகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடக்க அதில் அவர் பேனர் விசயத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு, அரசின் மோசமான நடவடிக்கை குறித்து பேசினார்.
இது தமிழ்நாட்டின் தற்போதைய விவாத பொருளாக, சிலர் அவர் பேசிய பேச்சு நியாயமானது தான் என சொல்லிவருகிறார்கள்.
இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ விஜய் மெர்சல் படத்திற்கு எங்களிடம் வந்தார். நாங்கள் முதலமைச்சரிடம் அழைத்துச்சென்றோம். முதலமைச்சர் பேசவில்லை என்றால் போன தீபாவளிக்கு மெர்சல் படம் வந்திருக்காது என கூறியுள்ளார்.