Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் இந்திய படம் இதுதான்.. அதிகாரபூர்வ தேர்வு

2020 ஆஸ்கர் விருதுக்கு தற்போது ரன்வீர் சிங் நடித்த கல்லி பாய் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் பிப்ரவரியில் திரைக்கு வந்த இந்த படம் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது.

பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூலை பெற்றது இந்த படம். இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த படங்கள் பட்டியலில் கல்லி பாய் நான்காவது இடத்தில் உள்ளது.

ஆஸ்கர் போட்டியில் வடசென்னை, ஒத்தசெருப்பு சைஸ் 7, சூப்பர் டீலக்ஸ் போன்ற 28 இந்திய படங்கள் இருந்த நிலையில், அவற்றில் இருந்து கல்லி பாய் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கருக்கு அனுப்பப்படுகிறது.

ஜோயா அக்தர் இந்த படத்தில் ஆலியா பட் ஹீரோயினாக நடித்திருந்தார்.