நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படம் இன்னும் ஒரு மாதத்தில் தீபாவளி பண்டிகைக்காக ரிலீஸ் ஆகிறது. கால்பந்தை மையமாக கொண்டு எடுக்கபட்டுள்ள இந்த படத்தில் நடிகை இந்துஜாவும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் அவர் நடிப்பதற்காக தன் தலைமுடியை குறைத்து தன்னுடைய தோற்றத்தையே மாற்றியுள்ளார்.
இந்த படம் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு ரஜினியின் தர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அதை தான் மறுத்துவிட்டதாக இந்துஜா கூறியுள்ளார்.