Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகரின் படத்தில் பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம்

நடிகர் விக்ரமின் நடிப்பில் அடுத்து பல படங்கள் உருவாகி வருகின்றன. அதிலும் கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படம் ஆரம்பித்த போது ரசிகர்கள் மத்தியில் அவரது கெட்டப் தோற்றம் பெரிய அளவில் பேசப்பட்டது.

ஆனால் அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டு கவுதம் மேனன் வேறு படங்களில் பணியாற்ற சென்றுவிட்டார். இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் தான் நடிக்கவுள்ளதாக பிக்பாஸ் புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தை விட இந்த படத்தின் ரோல் வித்தியாசமானதாக இருக்கும் என அபிராமி தெரிவித்துள்ளார். இந்த படம் மற்றுமின்றி மலேசிய தமிழ் படம் ஒன்றிலும் ஆபிராமி ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.