Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொடரும் அட்லீ, விஜய் பட சர்ச்சை! தயாரிப்பு நிறுவத்தின் அறிக்கையை வெளியிட்ட முக்கிய பிரபலம்

விஜய் பாக்ஸ் ஆஃபிஸில் மன்னர் என தமிழ் சினிமா கொண்டாடிவருகிறது. அதே வேளையில் அவரின் படங்களால் சில அதிருப்திகளும் இருப்பதை மறுக்க முடியாது.

அடுத்த பிகில் படமும் தீபாவளிக்கு வெளியாக போகிறது. போன வருடத்திற்கு முந்தய தீபாவளிக்கு வந்த படம் மெர்சல். அட்லீ இயக்கத்தில் வந்த இப்படத்தில் வெளிநாட்டை சேர்ந்த மேஜிக் கலைஞர்களும் பணியாற்றினர்.

படம் வெளியாகி சில மாதங்களுக்கு பின் மேஜிக் கலைஞர் ராமன் சர்மா தனக்கு இன்னும் சம்பளம் கொடுக்கப்படவில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவ்விவகாரம் இன்னும் ஓடிக்கொண்டிருக்க அவரின் குற்றச்சாட்டிற்கு அந்நிறுவனமும் அறிக்கை மூலம் எந்த பாக்கியும் இல்லை என பதில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அவர் என்னிடம் ஆதாரம் உள்ளது. எனக்கு இன்னும் சம்பளம் கொடுக்கப்படவில்லை என மீண்டும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.