Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா! யார் அந்த ஹீரோ

அனுஷ்கா ஷெட்டி என்றால் அருந்ததி, பாகுபலி தான் முதலில் நியாபகத்திற்கு வரும். பல படங்களில் அனுஷ்கா நடித்திருந்தாலும் இப்படங்கள் அவருக்கு மிகுந்த முக்கியத்துவமானதாக அமைந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு மாதவன் மற்றும் அனுஷ்கா இணைந்து நடிக்கவுள்ளனர். மாதவன் பல படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் பலரது மனதில் அலைபாயுதே மாதவனாக வலம் வருபவர்.

ஏற்கனவே அனுஷ்கா, மாதவன் இணைந்து நடித்த 'இரண்டு' என்ற படம் ஹிட் கொடுத்தது . அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. தற்போது இருவரும் இந்தி பட இயக்குனர் ஹேமந்த் மாதுகர் இயக்கத்தில் ஒரு திரில்லர் படத்தில் நடிக்க இருக்கின்றனர் என்று தகவல் வந்துள்ளது.

இந்த படத்திற்கு நிசப்தம் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். தமிழ் மட்டும் இந்தியில் வெளியாகும் படத்திற்கு பலரும் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹேமந்த் மாதுகர் இந்தியில் ஹிட் படங்கள் கொடுத்தவர் அவர்களுடன் அனுஷ்க்கா மட்டும் மாதவன் இணைவதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.