Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு மீது புகார் கொடுத்தேனா? முன்னணி தயாரிப்பாளர் விளக்கம்

நடிகர் சிம்பு சரியாக ஷூட்டிங் வரமாட்டார் என பல முன்னணி பிரபலங்கள் தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டு வைத்து வருவது அனைவருக்கும் தெரியும். அவரது படங்கள் தொடர்ந்து தாமதமாவதும் இதுதான் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு முஃடி பட தமிழ் ரீமேக் படத்தில் கவுதம் கார்த்தி உடன் நடித்துவந்தார். அந்த படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங்கில் பங்கேற்க சிம்பு தேதி ஒதுக்கவில்லை என அதன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துவிட்டார் என செய்தி பரவியது.

ஆனால் இந்த செய்தியை ஞானவேல்ராஜா மறுத்துள்ளார். யாரோ திட்டமிட்டே வதந்தி பரப்பியுள்ளனர் என அவர் கூறியுள்ளார். அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது எனவும் கூறியுள்ளார் அவர்.