Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் ரிலீஸுக்கு நல்ல தேதி இதுதான்.. பாக்ஸ் ஆபிஸ் பற்றி பிரபல தயாரிப்பாளர் பேசியது

நடிகர் விஜய்யின் பிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டாலும் தற்போது இன்னும் சென்சார் முடியாததால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

சரியான ரிலீஸ் தேதியை பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என அர்ச்சனா கல்பாத்தி அளித்திருந்த பேட்டிகளில் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில் இது பற்றி பேசியுள்ளார். தான் பல தியேட்டர் உரிமையாளர்களை சந்தித்ததாகவும், அனைவரும் பிகில் திரையிட அதிக ஆர்வத்தில் இருக்கின்றனர் என்றும், பெரிய தொகையை மினிமம் கேரண்டிகாக கொடுக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

படம் வெள்ளிக்கிழமை வெளியாகி தீபாவளிக்கு நல்ல வசூல் ஈட்டும் என நினைக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை தான் நல்ல ரிலீஸ் தேதியாக இருக்கும் என்பதை தான் பேசியுள்ளார்.