Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பட பிரச்சனையால் சங்கத்தமிழனுக்கு புது சிக்கல்

விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம் பிகில் படத்திற்க்கு போட்டியாக தீபாவளி ரிலீஸ் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தியேட்டர் கிடைக்காததால் பின்வாங்குவதாக செய்திகள் வருகிறது.

மேலும் படத்திற்க்கு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. படத்திற்கு எதிராக சேலம் பகுதி விநியோகஸ்த்தர் 7ஜி சிவா என்பவர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதற்கு முன்பு விஜயா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த வீரம் பட உரிமையை அதிக விலைக்கு வாங்கி நஷ்டம் அடைந்ததாகவும், அதன் பிறகு பைரவா ரிலீஸ் சமயத்தில் அதற்க்கு தருவதாக சொன்ன நஷ்டஈடு தொகையை தற்போது செட்டில் செய்தால் மட்டுமே சங்கத்தமிழன் படம் வெளியிட அனுமதிப்போம் என விநியோகஸ்தர் சங்கம் தெரிவித்துள்ளது.