Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி64 பற்றி பரவிய வதந்தி.. அதிர்ச்சியான படக்குழு கொடுத்த விளக்கம்

பிகில் படத்தினை சென்சாருக்கு அனுப்பும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், விஜய் தற்போது தன்னுடைய அடுத்த படமான தளபதி64 படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், மலையாள நடிகர் ஆன்டனி வர்கீஸ் என பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

படத்தினை விஜய்யின் நெருங்கிய உறவினரான சேவியர் பிரிட்டோ தான் தயாரிக்கிறார். ஆனால் அவர் படத்தில் இருந்து திடீரென விலகிவிட்டார், வேறொரு நிறுவனத்திற்க்கு கைமாறுகிறது படம் என்று சமீபத்தில் செய்திகள் பரவியது.

தளபதி64 படக்குழு இதை வதந்தி என கூறி மறுத்துள்ளது. ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், முதல் கட்ட ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.