Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகருடன் சீரியல் நடிகை வாணி போஜன் சினிமாவில்! முக்கிய நடிகை, நடிகருடன் படத்தின் டீசர் இதோ

தமிழ் தொலைக்காட்சியின் சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

தற்போது சினிமா படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் ஜோடி நடிக்கிறது.

காமெடி சாராவும், நடிகை வாணி போஜனும் இணைந்து நடிக்கிறார்கள். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜெயம் ரவி கடந்த மாதம் வெளியிட்டார். இதற்கு அசோக் நன்றி தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் தற்போது விஜய் சேதுபதியும் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். இதன் டீசரை விஜய் சேதுபதி இன்று மாலையில் வெளியிட்டார்.