Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படமே வேண்டாம் என கூறிய திரையரங்கம்? சர்ச்சைக்கு விளக்கம்

விஜய் நடித்துள்ள பிகில் படம் மற்றும் கார்த்தி நடித்த கைதி படமும் தீபாவளிக்காக அக்டோபர் 25ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனால் இரண்டில் எந்த படத்தை திரையிடுவது என தியேட்டர் உரிமையாளர்கள் விநியோகஸ்தர்களுடன் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் இருக்கும் ரம்பா திரையரங்கம் தாங்கள் பிகில் படம் திரையிடப்போவதில்லை என கூறியுள்ளனராம் என தகவல் பரவி வருகிறது. விஜய், அஜித் படங்கள் என்றாலே ரசிகர்கள் அடாவடி செய்கின்றனர், அதனால் கைதி படம் மட்டுமே திரையிடுகிறோம் என அந்த தியேட்டர் நிர்வாகம் கூறியதாகவும் மீடியாவில் செய்திகள் வந்தது.

Update:

ஆனால் அது உண்மையில்லை, இரண்டு படங்களையும் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என அந்த தியேட்டர் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.