Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு எத்தனை தியேட்டர்? முக்கிய பிரபலம் கூறிய விவரம்

தீபாவளி சீசனுக்கு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. பொதுவாகவே சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுஉள்ளது. அதுவும் பெரிய படங்கள் வருகிறது என்றால் மற்ற படங்கள் நிலைமை மோசம் தான்

இது பற்றி ரோகினி திரையரங்கின் உரிமையாளர் திரு பன்னீர் செல்வம் ஒரு சினிமா விழாவில் பேசினார்.

"தமிழ்நாட்டில் மொத்தம் 960 தியேட்டர்கள் உள்ளது. சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் மீது சமீப காலமாக ஒரு சாயம் பூசப்படுகிறது. சின்ன படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில்லை என்று. அடுத்த வாரம் இரண்டு படங்கள் வருகிறது. அவை எண்ணூறு தியேட்டர்களை ஆக்ரமித்துக்கொள்ளும். அது மூன்று வாரத்திற்கு ஓடும். அந்த நேரத்தில் வரும் சின்ன படங்கள் திரையிடமுடியாது. திரையிட்டால் மக்கள் வரமாட்டார்கள். மக்களின் மனநிலையும் மாற வேண்டும்"

"தியேட்டர் எண்ணிக்கை கூடினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்" என அவர் கூறியுள்ளார்.