Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசுரன் நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் அடுத்த பிரம்மாண்ட பட வாய்ப்பு

அசுரன் படத்தில் தனுஷ் மனைவியாக நடித்திருந்தார் மஞ்சு வாரியர். மலையாளத்தில் முன்னணி நடிகையான அவர் தற்போது இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார்.

அடுத்து அவருக்கு தமிழில் பல படவாய்ப்புகள் வருகிறதாம். ரஜினி அடுத்து இயக்குனர் சிவாவுடன் கூட்டணி சேரும் 168வது படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க மஞ்சு வாரியரை அணுகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஹீரோயினாக ஜோதிகா நடிக்கிறார் என நேற்று தகவல் கசிந்தது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.