Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் படமே ரிலீஸ் ஆனாலும் முதலில் தளபதி படத்தை தான் பார்ப்பேன்: முன்னணி இயக்குனர்

நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் தான். அவரது படங்களை விடாமல் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பவர்கள் உண்டு.

மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் ட்விட்டரில் தான் பிகில் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்கப்போவதாக கூறியுள்ளார்.

2 வருடங்களுக்கு முன்பு இவரது மேயாத மான் ரிலீஸ் ஆனபோது மெர்சல் படமும் ரிலீஸ் ஆனது. இவரது படத்தை விட்டுவிட்டு மெர்சல் படத்தைதான் முதல் காட்சி பார்த்தாராம் ரத்னகுமார்.

இது பற்றி அவர் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ள ட்விட் இதோ..