Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நள்ளிரவில் காரை பின்தொடர்ந்து வீடு வரை சென்ற ரசிகர்.. சூப்பர்ஸ்டார் என்ன செய்துள்ளார் பாருங்க

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினி தர்பார் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, இமயமலைக்கு சென்றிருந்தார். அங்கு அவர் எளிமையாக இருந்த பல புகைப்படங்கள் வெளியாகி வைரலானதை பார்த்தோம். ரிஷிகேஷ், கேதர்நாத் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றார் அவர்.

தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு ரஜினி நேற்று இரவு சென்னை திரும்பினார். அவரை விமான நிலையத்தில் மிக அதிக அளவில் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.

அதன்பிறகு ரஜினியின் காரை பின்தொடர்ந்து போயஸ் கார்டானுக்கே ரசிகர் ஒருவர் சென்றுவிட்டார். அதை பார்த்த ரஜினி வீட்டுக்குள் அழைத்து 'இனிமேல் இப்படி ஆபத்தான முறையில் பைக் ஓட்டாதே' என அட்வைஸ் கொடுத்தாராம்.

அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார் அவர். இது பற்றி அந்த நபர் நெகிழ்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.