Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பாளர் சங்கத்தில் மாநாடு பஞ்சாயத்து.. சிம்புவின் அம்மா எடுத்த அதிரடி முடிவு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு படிக்கவேண்டிய மாநாடு படம் இப்போது துவங்கும் அப்போது துவங்கும் என மாதக்கணக்கில் தள்ளிப்போய் கடைசியில் அதில் இருந்து சிம்பு நீக்கப்படுகிறார் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

நடிகர் சிம்புவுக்கு 2 கோடி அட்வான்ஸ் கொடுத்தாராம் அவர். ஷூட்டிங்கிற்கு ஒத்துழைப்பு வழங்காததால் படம் இந்த நிலைமைக்கு வந்தது. இது பற்றிய பஞ்சாயத்து சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று நடந்துள்ளது.

அதில் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பல முன்னணி தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு சிம்புவின் அம்மா ஒரு முடிவுக்கு ஒப்புக்கொண்டுள்ளார். சிம்புவை மாநாடு ஷூட்டிங்கிற்கு அனுப்புவதாகவும், காலை 10 முதல் மாலை 6 வரை அவர் நடித்துகொடுப்பார் என்றும், அதற்கு தான் பொறுப்பு என்று உறுதியளித்துவிட்டு சென்றுள்ளார்.

அதனால் மாநாடு ஷூட்டிங் விரைவில் துவங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.