தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவரது மனைவியாக நடித்திருந்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியர். அடுத்து அவர் ரஜினியின் 168வது படத்திலும் நடிக்கிறார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றது.
இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தற்போது கேரளா டிஜிபியிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் பிரபல தயாரிப்பாளர் VA ஸ்ரீகுமார் மேனன் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், இதனால் உயிருக்கு ஆபத்து என்றும் கூறியுள்ளார்.
மேலும் தான் கையெழுத்து போட்ட பிளாங்க் செக்குகளை வைத்து அவர் மோசடி செய்திருப்பதாகவும் கூறி அதற்கான டிஜிட்டல் ஆதாரத்தையும் மஞ்சு வாரியர் போலீசிடம் ஒப்படைத்துள்ளார்.