Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எங்கே போனார்கள் இவர்கள்? மறந்து போனதா தமிழ் சினிமா? பிரபல நடிகர் நாசர் பகிரங்கமான பேச்சு

தமிழ் சினிமா இன்று பல விதங்களில் முன்னேறியுள்ளது. இதில் திரையில் முன் முகம் காட்டி நடிப்பவர்களை தான் முக்கியமானவர்களாக நினைக்கிறோம். ஆனால் முகம் காட்டாமல் பல்வேறு விதங்களில் பல கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

நடிகர்கள், நடிகைகள் மற்றும் பலரை கதைக்கேற்றவாரு தேர்ந்தெடுப்பவர்கள் காஸ்டிங் இயக்குனர்கள். ஹாலிவுட், பாலிவுட்டில் இவர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் தமிழ் சினிமாவில் இதை காணமுடியவில்லை.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் காஸ்டிங் டைரக்டர்கள் அசோசியேசன் விழா நடந்தது. இதில் நடிகர் நாசர் பங்கேற்றார். இதில் அவர் ஹாலிவுட், பாலிவுட்டில் காஸ்டிங் இயக்குனர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

தமிழ் சினிமாவிலும் அது உருவாக வேண்டும். படத்தின் முழு ஸ்கிரிப்டையும் தெரிந்து வைத்திருப்பவர்கள் அவர்கள் தான். அவர்களின் கடமையும் பெருக வேண்டும், உரிமையும் கிடைக்க வேண்டும் என கூறியுள்ளார்.