Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூன்று நாட்களாக தூக்கமே இல்லை.. பிகில் பற்றி பிரபல தியேட்டர் உரிமையாளர் உருக்கம்

பிகில் மற்றும் கைதி ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவருவதால் தியேட்டர்களில் முன்பதிவு துவங்கி பராபரப்பாக நடந்துவருகிறது. பல இடங்களில் பிகில் நான்கு நாட்களுக்கு காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.

ஆனால் சில குறிப்பிட்ட தியேட்டர்கள் விநியோகஸ்தருடன் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக பிகில் படம் திரையிடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

பிரபல திரையரங்கமான நெல்லை ராம் முத்துராம் சினிமாஸ் அதில் ஒன்று. இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதன் உரிமையாளர் "நாங்கள் இதுவரை அனைத்து தளபதி படங்களையும் ரிலீஸ் செய்துள்ளோம். ஆனால் தற்போது பிகில் படம் வெளியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மனஉளைச்சளுக்கு ஆளாகியுள்ளோம். கடந்த மூன்று நாட்களாக தூங்க கூட முடியவில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.