Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் ரசிகர்கள் செய்த மோசமான செயலால் பிகில் படத்திற்கு வந்த எச்சரிக்கை

பிகில் படம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்தியா மட்டுமின்றி பிரான்ஸ் நாட்டிலும் அதிகம் காட்சிகள் போடப்படுகின்றன.

நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் சமயத்தில் அஜித் ரசிகர்கள் சிலர் பிரான்ஸின் லீ கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் கொண்டாடி தியேட்டர் ஸ்கிரீனை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. அதனால் இனி தமிழ் படங்களே திரையிடமாட்டோம் என முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது பிகில் படத்தின் ரிலீஸ் சமயத்தில் தியேட்டருக்குள் யாரும் பட்டாசு வெடிக்க கூடாது உட்பட பல்வேறு எச்சரிக்கைகள் தற்போது விடப்பட்டுள்ளன.