Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நானும் விஜய் ரசிகைதான், தயவு செய்து இப்படி செய்யாதீங்க: வீடியோ பதிவிட்ட பிரபலம்

பிகில் படம் திரைக்கு வர இன்னும் சில தினங்களே உள்ளன. முன்பதிவு துவங்கி பல இடங்களில் அனைத்து டிக்கெட்டுகளை விற்று தீர்ந்துள்ளன.

மறுபுறம் விஜய் ரசிகர்கள் பிகில் வெற்றிக்காக மண் சோறு சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். "நானும் விஜய் சாருக்கு பெரிய ரசிகை தான். விஜய் ரசிகர்கள் தயவு செய்து உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளாதீர்கள். உங்கள் அன்பை காட்ட வேண்டும் என்றால் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாருங்கள், இப்படி செய்யாதீர்கள்" என கேட்டுக்கொண்டுள்ளார்.