Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது சிவகார்திகேயன் சொன்னதாச்சே.. பிகில் விஜய் பேசும் இந்த வசனமும் காபியா?

அட்லீ படம் இயக்குகிறார் என்றாலே அவர் பல விஷயங்களை வேறு பல படங்களில் இருந்து எடுத்து தன் படங்களில் சேர்த்து கொள்கிறார் என நீண்ட நாட்களாகவே ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

தற்போது ரிலீஸ் ஆகியுள்ள பிகில் படமும் அப்படி பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. நெட்டிசன்கள் வீடியோ ஆதாரத்துடன் ட்விட்டரில் இது பற்றி பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிகில் விஜய் பேசும் ஒரு வசனம் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் பேசியதை அப்படியே எடுத்து பயன்படுத்தியுள்ளனர் என விமர்சனம் எழுந்துள்ளது.

"நாம் வெற்றிக்காகத்தான் உழைக்கணுமே தவிர அடுத்தவரை தோற்கடிக்க உழைக்கக்கூடாது" என சிவகார்த்திகேயன் பேசிய வசனம் தான் பிகிலில் விஜய் பேசியுள்ளார் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.