Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா! பிரம்மாண்ட படத்தில் சங்கமாகும் பிரபல நடிகர்கள், நடிகைகள்

இந்திய சினிமா உலகளவில் பெரும் சாதனை படைத்து வருகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் பாகுபலி. வரலாற்றுக்கதையை மையப்படுத்தி பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு வசூலை வாரிக்குவித்து சாதனை செய்தது.

தற்போது இதிகாசமான மகாபாரதம் படமாக எடுக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என முக்கிய மொழிகளில் படம் வெளியாகவுள்ளது.

இதில் அமிதாப் பச்சன், அமீர் கான், பிரபாஸ் என முக்கிய நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் திரௌபதி வேடத்தில் நடிக்க தீபிகா படுகோன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் மகாபாரத்தில் நிறைய வாழ்வியல் கதைகள் உள்ளன. திரௌபதியாக நான் நடிப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

இது என்னுடைய சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமானதாக இருக்கும் என நம்புகிறேன் என கூறியுள்ளார். இப்படம் ரூ 1000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறதாம்.