Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனர் விஜய் 'தலைவி' படத்திற்கு தடை கேட்டு வழக்கு

இயக்குனர் விஜய் அடுத்து முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்று படத்தை தலைவி என்ற பெயரில் இயக்குகிறார்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் கங்கனா ஹீரோயினாக நடிக்கிறார். படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில் தற்போது கங்கனா தமிழ் மொழியை கற்று வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு தடை கேட்டு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் வெப் சீரிஸுக்கும் அவர் தடை கேட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் படம் இருக்கிறதா என பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்த படங்களை வெளியிட கூடாது என தடை கேட்டு அந்த மனுவில் ஜெ தீபா தெரிவித்துள்ளார்.