Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமலா பாலின் அடுத்த படம்! சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிக்கேட்

நடிகை அமலா பால் அண்மைகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ராட்சஸன், பாஸ்கர் தி ராஸ்கல் என அவரின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

ஆனால் கடந்த வருடம் பெரும் எதிர்பார்ப்புடன் வந்த ஆடை படம் தோல்வி அடைந்தது. அடுத்ததாக அவரின் நடிப்பில் அதோ அந்த பறவை போல படம் வெளியாகவுள்ளது.

கே.ஆர்.வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு தணிக்கை குழு “U” சான்றிதழ் கொடுத்துள்ளது. தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை லிப்ரா நிறுவனம் வாங்கியுள்ளதாம்.

மேலும் படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாம்.