Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கைதி நடிகர் தான் துருவ நட்சத்திரம் வில்லனா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸான செய்தி

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இந்த படம் தற்போது போஸ்ட் productionல் இருப்பதாக கவுதம் மேனன் சமீபத்தில் தெரிவித்தார்.

விக்ரம் மிக வித்யாசமான தோற்றத்தில் நடித்துள்ள இந்த படம் மிகவும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டீசரில் வில்லன் யார் என்பது காட்டப்படவில்லை.

தற்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் கைதி படத்தில் அன்பு என்ற வில்லன் ரோலில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ் தான் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்துள்ளாராம். துருவ நட்சத்திரம் டீசரில் வரும் குரல் இவருடையதுதான்.