Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவிற்கு திரும்பும் பருத்திவீரன் நடிகை

பருத்திவீரன் பிரியாமணி என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

பிரியாமணி கடைசியாக தமிழ் சினிமாவில் நடித்த படம் சாருலதா. 2012ல் வந்த இந்த படத்திற்கு பிறகு இவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது 7 வருடங்கள் கழித்து Dr 56 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு திரும்புகிறார். இது கன்னடத்திலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. இந்த படத்தில் பிரியாமணி சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார்.

தொடர் கொலைகள் புலனாய்வு செய்யும் அதிகாரி தான் அவரது ரோல்.