பிகில் படம் பெரிய ஹிட், கைதி.. பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

சினிமா by John Andrews
Topics : #Bigil #Kaithi

நடிகர் விஜய்யின் பிகில் படம் பாக்ஸ்ஆபிசில் வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி ரிலீஸ் படங்களான பிகில் மற்றும் கைதி ஆகியவற்றின் வசூல் பற்றி பிரபல தயாரிப்பாளரும் எடிட்டருமான மோகன் பேசியுள்ளார். 'பிகில் படம் பெரிய ஹிட் ஆகியுள்ளது. கைதி படமும் சூப்பர்ஹிட் என பேசியுள்ளார் அவர்.

"ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்திற்கு தான் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வந்தார்கள். அதற்கு பின் வந்த பல படங்கள் ஹிட் ஆகியுள்ளது. அதனால் எனக்கு மகிழ்ச்சி" எனவும் கூறியுள்ளார் அவர்.

மோகன் நடிகர் ஜெயம் ரவியின் அப்பா என்பது குறிப்பிடத்தக்கது.